சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வழிநடத்துகிறார் மெத்தியூஸ்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வழிநடத்துகிறார் மெத்தியூஸ்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வழிநடத்துகிறார் மெத்தியூஸ்

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2017 | 3:44 pm

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை அஞ்சலோ மெத்தியூஸ் வழிநடத்தவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் முக்கியமான கிரிக்கெட் தொடர்களில் சம்பியன்ஸ் கிண்ண தொடரும் ஒன்றாகும்.

இம்முறை நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடரை இங்கிலாந்தும் வேல்சும் இணைந்து நடத்தவுள்ளன.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் செயற்படவுள்ளதோடு, உப தலைவராக உபுல் தரங்க பெயரிடப்பட்டுள்ளார்.

நிரோஷன் திக்வெல்ல , குசல் மென்டிஸ் , குசல் ஜனித் பெரேரா , சாமர கபுகெதர , அசேல குணரத்ன, தினேஸ் சந்திமால் , லசித் மலிங்க , சுரங்க லக்மால் , நுவன் பிரதீப் , நுவன் குலசேகர , திஸ்ஸர பெரேரா , லக் ஷான் சந்தகேன் , சீக்குகே பிரசன்ன ஆகியோர் இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி முதலாவது போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்