கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் மதுபான தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்

கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் மதுபான தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2017 | 3:57 pm

கல்குடாவில் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை நிர்மாணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் இன்று (24) கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9.45 அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்புச் சங்கத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், வாழைச்சேனை சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.

கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிப்பிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்