மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே எனது இலக்கு – அனிதா ஜெகதீஸ்வரன்

மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே எனது இலக்கு – அனிதா ஜெகதீஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2017 | 9:01 pm

மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் அவர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (23) ஆரம்பமானது.

23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.40 மீற்றருக்கு தாவிய யாழ். மாவட்டத்தின் அனிதா ஜெகதீஸ்வரன்  போட்டி சாதனையை புதுப்பித்தார்.

இதேவேளை 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலுன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில் 2.90 மீற்றருக்கு பாய்ந்த வி. கிரிஜா வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்திக் கொண்டார்.

மேலும் 18 வயதிற்கிட்பட்ட மகளிருக்கான ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் 33.05 மீற்றருக்கு ஈட்டி எறிந்த யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் எஸ். சங்கவி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்