Fox Hill Super Cross பந்தயம் தியத்தலாவையில் அதிசிறப்பாக நடைபெற்றது

Fox Hill Super Cross பந்தயம் தியத்தலாவையில் அதிசிறப்பாக நடைபெற்றது

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2017 | 7:20 pm

Fox Hill Super Cross 2017 பந்தயத்தின் காரோட்டத்தில் அஷான் சில்வாவும் மோட்டார் சைக்கிள் பிரிவில் இஷான் தசநாயக்கவும் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர்.

இலங்கையில் நடத்தப்படும் பிரதான மோட்டார் சைக்கிள் மற்றும் காரோட்டப் பந்தயமான Fox Hill Super Cross இன்று தியத்தலாவையில் அதிசிறப்பாக நடைபெற்றது.

காரோட்டம், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் தலா 12 பிரிவுகள் உள்ளடக்கப்பட்டதோடு, 13 வயதிற்குட்பட்டோருக்கான மோட்டார் சைக்கிள் பந்தயமும் நடத்தப்பட்டது.

25 ஆவது தடவையாகவும் நடைபெற்ற Fox Hill Super Cross பந்தயத்தை விளையாட்டுத்துறை அமைச்சும் முப்படையும் இணைந்து நடத்தின.

ஒன்றரை வருடங்களின் பின்னர் Fox Hill Super Cross பந்தயத்தில் பங்குபற்றிய அஷான் சில்வா 3500 சி.சி காரோட்டப் பிரிவில் முதலிடத்தைக் கைப்பற்றினார்.

இரண்டாமிடத்தை தினேஸ் ஜயவர்தன அடைந்தார்.

ஆக்ரோஷமாக நடைபெற்ற 125 சி.சி மோட்டார் சைக்கிள் பிரிவில் இரண்டு வகையான போட்டிகளிலும் வெற்றியீட்டிய இஷான் தசநாயக்க சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்