மீதொட்டமுல்ல: நிர்க்கதியானவர்களை கொலன்னாவை நெற்களஞ்சியசாலைக்கு அனுப்பத் திட்டம்

மீதொட்டமுல்ல: நிர்க்கதியானவர்களை கொலன்னாவை நெற்களஞ்சியசாலைக்கு அனுப்பத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2017 | 8:17 pm

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்களை, புனரமைக்கப்பட்ட கொலன்னாவை நெல் களஞ்சியசாலை கட்டடத்தொகுதிக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொலன்னாவை டெரன்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 400க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது தங்கியுள்ளனர்.

மக்கள் வாழக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியசாலை கட்டடத்தொகுதியில் முதற்கட்டத்தின் கீழ் 26 குடும்பங்கள் தங்கவைக்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 50 குடும்பங்கள் அங்கு தங்கவைக்கப்படவுள்ளன.

முற்றாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு லக்சத வீட்டுத்தொகுதியில் புதிய வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டத்தின் கீழ் 30 குடும்பங்கள் தற்போது அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளன.

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மேலும் 68 குடும்பங்களுக்கு இங்கு வீடுகள் வழங்கப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்