மீதொட்டமுல்ல: அரசின் நிவாரண செயற்பாடுகள் தொடர்பில் சிக்கல் காணப்படுமாயின் அறிவிக்கலாம்

மீதொட்டமுல்ல: அரசின் நிவாரண செயற்பாடுகள் தொடர்பில் சிக்கல் காணப்படுமாயின் அறிவிக்கலாம்

மீதொட்டமுல்ல: அரசின் நிவாரண செயற்பாடுகள் தொடர்பில் சிக்கல் காணப்படுமாயின் அறிவிக்கலாம்

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2017 | 3:29 pm

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நிவாரண செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின் அது குறித்து அறிவிக்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

இது குறித்து வெளியாகும் வதந்திகளைக் கருத்திற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பில் சிக்கல்கள் காணப்படுமாயின் பிரதேச செயலகங்களினூடாக அல்லது மாவட்ட செயலகங்களினூடாக அதனை நிவர்த்தி செய்துகொள்ளுமாறும் கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர கேட்டுக்கொண்டார்.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்ததில் வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான வீட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக 2,50,000 ரூபா உதவித் தொகை வழங்கப்படுகின்றது.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டிற்கு அண்மித்த அவதான வலயத்திலிருந்து வெளியேற்றப்படுவோருக்கு மாதாந்தம் 50,000 ரூபா நிதியுதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்