என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா

என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா

என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2017 | 5:00 pm

பாகுபலி படத்தில் நடித்த பிறகு ஒரு நடிகையாக தன் மீதே தனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.

சவாலான காட்சிகளில் தன்னால் நடிக்க முடியும் என்ற துணிச்சலை பாகுபலி படம் தனக்கு தந்துள்ளதாகவும் இதனால் தன்னைப் பற்றிய இமேஜ் முழுவதும் மாறிவிட்டதாகவும் தமன்னா குறிப்பிட்டுள்ளார்.

”இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் ஒரு கனவு போல இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் நடித்ததை மறக்கவே முடியாது. இன்னும் எத்தனை படங்களில் நடித்தாலும், ‘பாகுபலி’யில் நடித்தது என் மனதைவிட்டு அகலாது. திரை உலகில் எனக்கு ஒரு வித்தியாசமான பாதையை வகுத்துக்கொடுத்த இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்,” என தெரிவித்துள்ளார் தமன்னா.

‘பாகுபலி-2’-ல் முதல் பாகத்தில் நடித்த அதே வேடம் தான் என்றாலும், இதில் அழுத்தமான கதை இருக்கிறது என குறிப்பிட்ட தமன்னா, இந்தப் படத்திற்காக குதிரை ஏற்றத்தை முறையாகக் கற்றதாகவும் கூறியுள்ளார்.

பாகுபலி மூலம் தனது சினிமாக் கனவு நிறைவேறிவிட்டதாகவும் பாகுபலியுடன் எதனையும் ஒப்பிட முடியாது என்றும் தமன்னா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்