இந்தியாவின் கடுமையான வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம்: ஆய்வில் தகவல்

இந்தியாவின் கடுமையான வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம்: ஆய்வில் தகவல்

இந்தியாவின் கடுமையான வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம்: ஆய்வில் தகவல்

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2017 | 4:40 pm

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சிக்கும் 130 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கும் ஐரோப்பிய நாடுகளே காரணம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெய்த மழையில் சல்ஃபர்-டை-ஒக்சைட் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பெய்த மழை நீரில் சல்ஃபர்-டை-ஒக்சைட் அதிக அளவில் கலந்திருந்தமையும் கண்டறியப்பட்டது.

மழை நீரில் 40 சதவீதம் சல்ஃபர்-டை-ஒக்சைட் கலந்திருந்ததுடன், காற்று மாசு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.

ஐரோப்பாக் கண்டத்தில் வட மேற்கு மற்றும் தென் மேற்கு நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் நிலக்கரியில் இருந்து சல்ஃபர்-டை-ஒக்சைட் வெளியாகிறது.

அவை காற்றில் மாசாகப் படிந்து மழை நீருடன் மீண்டும் பூமிக்கு வருகிறது.

இதனால் பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் கடுமையான நோய்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், காற்று மாசினையும் புவி வெப்பமயமாதல் விளைவையும் ஒன்று போல் கருதி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்