ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2017 | 3:59 pm

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரான மசார்-ஐ-ஷெரீப் நகருக்கு அருகேயுள்ள இராணுவத்தளத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது இராணுவ வீரர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாகவும் மற்றவர்கள் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 10 தலிபான்கள் ஈடுபட்டதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தவ்லத் வாசிரி குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டு இராணுவ வீரர்களின் உடையை அணிந்து தலிபான்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 7 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் பிடிபட்டுள்ளதாகவும் மற்ற இருவரும் தப்பிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிடிபட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்