முல்லேரியாவில் தனியார் காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

முல்லேரியாவில் தனியார் காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

முல்லேரியாவில் தனியார் காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

21 Apr, 2017 | 8:09 pm

கொட்டிகாவத்த – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளின் குப்பைகள், தனியார் காணியொன்றில் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நிபந்தனைகளுடனான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

குறித்த காணியின் உரிமையாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லேரியா – சோமாதேவி பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள தமது காணியில் அனுமதியின்றி பிரதேச சபையினால் குப்பைகள் கொட்டப்படுவதாக மனுதாரர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் அதிக அசௌகரியங்களை எதிர்கொள்வதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பிரகாரம், குறித்த காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு, கொட்டிகாவத்த – முல்லேரியா பிரதேச சபையின் செயலாளருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பிலியந்தலை – கரதியான கழிவுப்பொருள் அகற்றல் பிரிவிற்கு அருகில் நாளை (22) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் வகையில், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

பிலியந்தலை பொலிஸார் முன்வைத்த விடயங்களைக் கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்