ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை பிரியானா ரோலின்ஸூக்கு ஒரு வருட போட்டித்தடை

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை பிரியானா ரோலின்ஸூக்கு ஒரு வருட போட்டித்தடை

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை பிரியானா ரோலின்ஸூக்கு ஒரு வருட போட்டித்தடை

எழுத்தாளர் Bella Dalima

21 Apr, 2017 | 5:14 pm

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அமெரிக்க மெய்வல்லுனர் வீராங்கனையான பிரியானா ரோலின்ஸூக்கு ஒரு வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மெய்வல்லுனர் சங்கத்தினாலேயே இவருக்கு இந்த போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் அமெரிக்க மெய்வல்லுனர் வீராங்கனையான பிரியானா ரோலின்ஸ் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

2018 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவிற்கான ஏற்பாடுகளில் அமெரிக்கா தனது நாட்டு வீர வீராங்கனைகளை ஈடுபடுத்தி வந்தது.

இதன் பொருட்டு, அனைத்து வீர வீராங்கனைகளையும் அந்நாட்டு மெய்வல்லுனர் சங்கம் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியிருந்தது.

மூன்று முறை நடத்தப்பட்ட இந்த சோதனையில் பிரியானா ரோலின்ஸ் ஈடுபடவில்லை என தெரிவித்து அவருக்கு ஒரு வருட போட்டித்தடையை அமெரிக்க மெய்வல்லுனர் சங்கம் விதித்துள்ளது.

இடைப்பட்ட வருடத்தில் பிரியானா ரோலின்ஸூக்கு ஊக்கமருந்து சோதனை தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும் , அவர் அதனைப் புறக்கணித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பிரியானா ரோலின்ஸ் ஒரு வருடத்திற்கு எந்த வித மெய்வல்லுனர் போட்டிகளிலும் ஈடுபட முடியாது என அமெரிக்க மெய்வல்லுனர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்