மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்மித்துள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்மித்துள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2017 | 1:06 pm

மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்மித்து அபாயம் நிலவும் வலயத்தில் வாழ்ந்துவரும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யுமானால் குப்பை மேட்டை அண்மித்துள்ள பகுதிகளில் மீண்டும் அனர்த்த நிலை ஏற்படலாம் என கொலன்னாவை பிரதேச செயலாளர் சுகத் சிசிரகுமார குறிப்பிட்டார்.

இதன் காரணமாக உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து செல்லுமாறு, அந்த வலயத்திலுள்ள மக்களுக்கு அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் கூறினார்.

மீண்டும் மழை பெய்கின்ற பட்சத்தில் குப்பை மேட்டுக்கு அருகிலுள்ள ஏனைய கட்டடங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதாலேயே அங்கிருந்து வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்களுக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கொலன்னாவை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அங்கிருந்து வெளியேறும் மக்கள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது வாடகைக்கு வேறு இடங்களில் தங்குவதற்கு முடியும் என்பதுடன், விரும்பினால் அரசாங்க நலன்புரி நிலையத்தில் தங்குவதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்