மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை கைது செய்வதற்கு விசேட திட்டம்

மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை கைது செய்வதற்கு விசேட திட்டம்

மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை கைது செய்வதற்கு விசேட திட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2017 | 10:33 am

சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வருகைதந்து மாணிக்கக் கல் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை கைது செய்வதற்காக பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிககார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசா மூலம் வருகைதந்து மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர கூறினார்.

இதேவேளை மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்ற இடங்களில் இடம்பெறுகின்ற அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்