பயங்கரவாத செயற்பாடுகளால் இழந்த காணிகளை மீளப்பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

பயங்கரவாத செயற்பாடுகளால் இழந்த காணிகளை மீளப்பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2017 | 8:54 pm

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக தமது காணிகளை இழந்த மக்கள், அவற்றை சட்டரீதியாக மீள பெற்றுக்கொள்வதற்கு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, காணிகளை இழந்தவர்கள் அதனை மீளப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கு தீர்வு வழங்கும் வகையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அரசாங்கத்தினால் புதிய சட்டமொன்று கொண்டுவரப்பட்டது.

2016 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் மூலம், தங்களின் காணி மற்றும் அசையாத சொத்துக்களுக்கு உரிமை கோருவதற்கான சட்ட ரீதியான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தினூடாக பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கான பலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் ஒரு வருட கால அவகாசம் காணப்படுகின்றது.

அதற்கமைய, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்தரணிகளூடாக நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்தல் அவசியமாகும்.

இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆலோசனைகள் தேவைப்பட்டால் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

விலாசம்
தலைவர்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,
கொழும்பு – 12

 

தொடர்புகளுக்கு
011 – 2447134 அல்லது 011 – 2331697

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்