தாய்லாந்தில் 15 இடங்களில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்

தாய்லாந்தில் 15 இடங்களில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்

தாய்லாந்தில் 15 இடங்களில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2017 | 4:21 pm

தாய்லாந்து நாட்டின் தென் பகுதி எல்லையில் அடுத்தடுத்து 15 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்லாந்து நேரப்படி நேற்றிரவு 7 மணி முதல் 10.30 மணி வரை இந்த தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதில் 2 பொலிஸார் உயிரிழந்ததாகவும் மூவர் படுகாயமடைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அங்கு இதே போன்றதொரு தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் 4 பேர் பலியானதுடன், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்