தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் விடுதலை

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் விடுதலை

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2017 | 9:07 am

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மத்திய அரசின் வேண்டுகோளுக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை மீனவர்கள் ஏழு பேரையும் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்தே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் தூத்துக்குடிக்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.

திக்கோவிட்ட கடற்பிராந்தியத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் படகொன்றுடன் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்