தனது குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

தனது குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2017 | 1:24 pm

தனது குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் ஹசலாக்க பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 37 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், சிசுவை பிரசவித்ததுடன் கொலை செய்து வீட்டிற்கு அருகில் புதைத்து விட்டு கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரான பெண் ஹசலக்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் தகவலுக்கு அமைய சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்