கொழும்பிலுள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்கு விசேட குழு

கொழும்பிலுள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்கு விசேட குழு

கொழும்பிலுள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்கு விசேட குழு

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2017 | 8:49 am

கொழும்பில் கழிவகற்றல் முகாமைத்துவம் செய்வதற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக பிரதமரால் அமைச்சுகளுக்கு இடையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், சுற்றாடல், அனர்த்த முகாமைத்துவம், மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

30 நாட்களுக்குள் கழிவகற்றல் முகாமைத்துவத்திற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் இந்த குழுவிற்கு அறிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிரி குறிப்பிட்டார்.

இதற்கமைய குப்பைகளை வகைப்படுத்தல், மீள்சுழற்சி மற்றும் கொழும்பில் குப்பைகள் சேருவதால் கழிவுகள் நிலத்தில் படிவதைத் தடுப்பதற்கான முறைமை உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை இந்த குழு, பிரதமரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

இது தொடர்பான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிரி மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்