உலகின் மிக அழகிய பெண்ணாக ஜூலியா ரொபர்ட்ஸ் ஐந்தாவது முறையாகத் தெரிவு

உலகின் மிக அழகிய பெண்ணாக ஜூலியா ரொபர்ட்ஸ் ஐந்தாவது முறையாகத் தெரிவு

உலகின் மிக அழகிய பெண்ணாக ஜூலியா ரொபர்ட்ஸ் ஐந்தாவது முறையாகத் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2017 | 5:55 pm

2017 ஆம் ஆண்டின் உலகின் மிக அழகிய பெண்ணாக ஹொலிவுட் நடிகை ஜூலியா ரொபர்ட்ஸை பீப்பிள் பத்திரிகை தெரிவு செய்துள்ளது.

49 வயதான ஜூலியா ரொபர்ட்ஸ், டேனி மோடர் எனும் ஔிப்பதிவாளரை 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 12 வயதில் ஹேஸல், பின்னேயஸ் என்ற இரட்டையர்களும், 9 வயதில் ஹென்றி 9 என்ற மகனும் உள்ளனர்.

இவர் உலகின் மிக அழகான பெண்ணாக 5 ஆவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

26 ஆண்டுகளில் 5 முறை தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதன்முதலாக 1991 ஆம் ஆண்டு உலகின் மிக அழகான பெண்ணாக பீப்பிள் பத்திரிகையால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு ஹொலிவுட் நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன் உலகின் மிக அழகான பெண்ணாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

 

julia-wmb-cover


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்