இரத்தினபுரி மாடுவாகல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி மாடுவாகல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2017 | 1:48 pm

இரத்தினபுரி கிரிஎல்ல மாடுவாகல 20 வீட்டுத்திட்டம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 25 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் அயல் வீடொன்றிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் சக நண்பரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறே துப்பாக்கிப் பிரயோகத்திற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்