இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2017 | 11:23 am

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை 2 பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜூன் 23 ஆம் திகதி முதல் பாகம் வெளியாகவுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் சங்கர்ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

3 விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு, 3 தோற்றங்களில் ‘மதுரை மைக்கேல்’ தோற்றம் வரைபடப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.

‘அஸ்வின் தாத்தா’ தோற்றத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, சமீபத்தில் நடைபெறவிருந்த தாய்லாந்து படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது, அக்காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.

இந்நிலையில், இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட தற்போது படக்குழு முடிவு செய்துள்ளது.

முதல் பாகம் ஜூன் 23 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தில் ‘மதுரை மைக்கேல்’ மற்றும் ‘அஸ்வின் தாத்தா’ ஆகிய தோற்றங்கள் மட்டும் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இரண்டாவது பாகம் வெளியிடப்படும் திகதி இன்னும் அறிவிக்கப்பட்டவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்