மூன்று வருட பதவிக்காலம் எஞ்சியுள்ள நிலையில் பிரிட்டனில் பாராளுமன்றத் தேர்தல்: தெரசா மே அறிவிப்பு

மூன்று வருட பதவிக்காலம் எஞ்சியுள்ள நிலையில் பிரிட்டனில் பாராளுமன்றத் தேர்தல்: தெரசா மே அறிவிப்பு

மூன்று வருட பதவிக்காலம் எஞ்சியுள்ள நிலையில் பிரிட்டனில் பாராளுமன்றத் தேர்தல்: தெரசா மே அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Apr, 2017 | 5:17 pm

பிரிட்டனில் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்தவுள்ளதாக பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள பாராளுமன்றத்திற்கான பதவிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் எஞ்சியிருக்கும் நிலையில், பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதன் பின்னணியில், புதிய பொதுத் தேர்தல் மட்டுமே அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி, நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர முடியும் எனும் முடிவுக்கு தான் வந்துள்ளதாக தெரசா மே தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் தயக்கத்திற்கு பிறகே இந்த முடிவைத் தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு ஒருங்கிணைந்திருந்தாலும், நாடாளுமன்றம் அவ்வாறு இல்லை எனவும் தனது உரையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் தயாராகிவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அரசின் முன்னெடுப்புகளை முடக்குவதாகவும் அதன் மூலம் பேச்சுவார்த்தைகள் பலவீனமடைகின்றன என்றும் தனது உரையில் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்படாவிட்டால், “எதிர்க்கட்சிகளின் பித்தலாட்டங்கள்” தொடரும் எனவும் அவர் சாடியுள்ளார்.

பொதுத்தேர்தலை ஜூன் 8 ஆம் திகதி நடத்துவது குறித்து நாளை (19) பாராளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டுவரப்படும்போது, அதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இந்த சட்டமூலம் பாராளுமன்றதில் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றாலும், அப்படியான சட்டமூலத்தை தாங்கள் ஆதரிக்க தயாராக இருப்பதாக தொழிலாளர் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்