மீதொட்டமுல்ல பிரதேசத்தில் நோய்கள் பரவும் அபாயம்

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் நோய்கள் பரவும் அபாயம்

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் நோய்கள் பரவும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2017 | 9:32 am

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒருபகுதி சரிந்து வீழ்ந்ததை தொடர்ந்து, அந்த பகுதியில் நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் நிலைமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும் என சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இணைப்பாளரான டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

காற்றோட்டம் குறைவடைகின்ற போது சுவாச நோய்கள் பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நீர் மாசடைதல் மற்றும் சுகாதார நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் போது சரும நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நிலைமைகள் குறித்து முன்கூட்டியே உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இணைப்பாளர் கூறினார்.

இதுதவிர நகர்ப்புற பிரதேசம் என்றவகையில், டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை விசிறும் நடவடிக்கைகளையும் சுகாதார தரப்பிரன் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்காக, மருத்துவ குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இணைப்பாளர்டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்