மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பான ஆரம்பக்கட்ட கள ஆய்வுகள் நிறைவு

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பான ஆரம்பக்கட்ட கள ஆய்வுகள் நிறைவு

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பான ஆரம்பக்கட்ட கள ஆய்வுகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2017 | 7:21 am

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒருபகுதி சரிந்து வீழ்ந்தமை தொடர்பான ஆரம்பக்கட்ட கள ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் இருவேறு ஆய்வுகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சூழல் பொறியியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுருத்த கருணாரத்தன குறிப்பிட்டார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று பல்கலைக்கழக் துணைவேந்ததர் தலைமையில் இன்று (18) மதியம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பேராதனை பல்கலைக்கழகத்தின் விசேட குழுவொன்றை ஆய்வு நடவடிக்கைகளுக்காக நியமிப்பதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் உபுல் திசாநாயக்க நேற்று நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்த குழுவில் பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானம், விவசாய விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 10 விரிவுரையாளர்களைக் கொண்ட குழுவொன்று இந்த ஆய்வில் பங்குபற்றியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்