பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

எழுத்தாளர் Bella Dalima

18 Apr, 2017 | 5:51 pm

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் மல்லையாவைக் கைது செய்தமையை லண்டன் பெருநகர பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

மோசடிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்திய அதிகாரிகள் சார்பாக லண்டன் பெருநகர பொலிஸாரின் நீதிமன்ற விசாரணைகளுக்கு நாடுகடத்தும் பிரிவு கைது செய்ததாக லண்டன் பெருநகர பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் மற்றும் இந்திய வங்கிகளுக்கு 9000 கோடி ரூபாய் (INR) செலுத்தத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள விஜய் மல்லையாவுக்கு கிரிக்கெட் மற்றும் மோட்டார் பந்தய விளையாட்டுக்களில் ஆர்வமுண்டு.

இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் வெஸ்ட்மினிஸ்டர் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்