டெங்கு காய்ச்சலுக்கான புதிய மருந்தை இலங்கையில் உபயோகப்படுத்துவது தொடர்பில் அவதானம்

டெங்கு காய்ச்சலுக்கான புதிய மருந்தை இலங்கையில் உபயோகப்படுத்துவது தொடர்பில் அவதானம்

டெங்கு காய்ச்சலுக்கான புதிய மருந்தை இலங்கையில் உபயோகப்படுத்துவது தொடர்பில் அவதானம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2017 | 8:34 am

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கான புதிய மருந்து இலங்கைக்கு பொருத்தமானதா என்பது தொடர்பில் வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்காக விசேட வைத்திய நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் அந்த மருந்தை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்களை விரைவாக பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்