செயலிழந்த நுரைச்சோலை மின்பிறப்பாக்க இயந்திரம் தொடர்பில் ஆராய சீன நிபுணர்களிடம் இருந்து ஒத்துழைப்பு

செயலிழந்த நுரைச்சோலை மின்பிறப்பாக்க இயந்திரம் தொடர்பில் ஆராய சீன நிபுணர்களிடம் இருந்து ஒத்துழைப்பு

செயலிழந்த நுரைச்சோலை மின்பிறப்பாக்க இயந்திரம் தொடர்பில் ஆராய சீன நிபுணர்களிடம் இருந்து ஒத்துழைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2017 | 8:55 am

செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்க இயந்திரம் தொட்பில் ஆராய்வதற்கு சீன நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

செயலிழந்துள்ள மின்பிறப்பாக்க இயந்திரத்தை மீண்டும் மின்சார கட்டமைப்புடன் இணைத்துக்கொள்வதற்கு ஒருவாரம் எடுக்கும் என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

அனல் மின்நிலையத்தின் முதலாம் மின் பிறப்பாக்க இயந்திரமே அடிக்கடி செயலிழப்பதாகவும், அதனை புனரமைப்பதற்கு சீன மற்றும் வெளிநாட்டு விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த மின்பிறப்பாக்க இயந்திரம் செயலிழந்துள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று (18) நுரைச்சோலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, பிரதியமைச்சர் மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்