சீனாவின் முதல் காலாண்டுப் பொருளாதார வளர்ச்சி வீதம் நிர்ணயித்த இலக்கை விஞ்சியது

சீனாவின் முதல் காலாண்டுப் பொருளாதார வளர்ச்சி வீதம் நிர்ணயித்த இலக்கை விஞ்சியது

சீனாவின் முதல் காலாண்டுப் பொருளாதார வளர்ச்சி வீதம் நிர்ணயித்த இலக்கை விஞ்சியது

எழுத்தாளர் Bella Dalima

18 Apr, 2017 | 4:00 pm

சீனாவின் முதல் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி வீதம் நிர்ணயித்த இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளது.

சீனாவின் உட்கட்டமைப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரித்து, ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளதாக சீனாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதலாவது காலாண்டில் சீனப்பொருளாதாரம் 6.9 சதவீதம் என்ற ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

அதன்படி, முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.63 இலட்சம் கோடி டொலரைத் தொட்டுள்ளது.

இந்த பொருளாதார வளர்ச்சி என்பது, முழு ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவான 6.5 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம். அதேபோன்று, கடந்த 2016 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஒக்டோபர் – டிசம்பர்) எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போதும் இது அதிகம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் ஏற்றுமதி சரிவைக் கண்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், யுவான் கரன்ஸி மதிப்பு அடிப்படையில், ஏற்றுமதி கணிசமான ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

இரண்டாம் காலாண்டைப் பொருத்தவரை, சீனப்பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையானதாகவும் வலிமையானதாகவும் இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழலை மாற்றியமைக்க சீனா முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து, உள்நாட்டு நுகர்வுக்கு அந்நாடு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இதற்காக, சீனா உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீட்டை கணிசமான அளவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்