சாருஹாசனும் ஜனகராஜும் இணையும் ‘தாதா 87’

சாருஹாசனும் ஜனகராஜும் இணையும் ‘தாதா 87’

சாருஹாசனும் ஜனகராஜும் இணையும் ‘தாதா 87’

எழுத்தாளர் Bella Dalima

18 Apr, 2017 | 4:29 pm

சாருஹாசனும் ஜனகராஜும் இணைந்து ‘தாதா 87’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

80 களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் தனது தனித்துவமான, எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் சாருஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணனாவார்.

அதேபோல், 80, 90 களில் நகைச்சுவையில் மட்டுமல்லாது, குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ்.

சாருஹாசன் தமிழ் சினிமாவில் தற்போதும் சிற்சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால், ஜனகராஜோ சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில், சாருஹாசனும் ஜனகராஜும் இணைந்து ‘தாதா 87’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்கள்.

இப்படத்தில் சாருஹாசன் தாதாவாக நடிக்கிறாராம். ஜனகராஜ் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம். இவர்தான் படத்தின் கதாநாயகியின் தந்தையாவும் நடிக்கிறாராம்.

இப்படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். லியான்டர் லீ மார்ட்டி என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் போஸ்டரை நேற்று நடிகை கேத்ரீன் தெரசா வெளியிட்டுள்ளார். இப்படத்திற்காக கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கலை சினிமா நிறுவனம் மூலம் கலைச்செல்வன் மருதை என்பவர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்