உலகின் செல்வாக்கான 100 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டது டைம்ஸ்: முதலிடத்தில் பிலிப்பைன்ஸ் அதிபர்

உலகின் செல்வாக்கான 100 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டது டைம்ஸ்: முதலிடத்தில் பிலிப்பைன்ஸ் அதிபர்

உலகின் செல்வாக்கான 100 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டது டைம்ஸ்: முதலிடத்தில் பிலிப்பைன்ஸ் அதிபர்

எழுத்தாளர் Bella Dalima

18 Apr, 2017 | 3:28 pm

பிரபல பத்திரிகையான டைம்ஸ், உலகின் செல்வாக்கான 100 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இம்முறை இப்பட்டியலில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டியூடெர்ட் (Rodrigo Duterte) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப்பலியெடுத்த போதைப்பொருள் பாவனைக்கு எதிராக, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி, வெற்றி கண்டவர் ரொட்ரிகோ என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வாக்கான 100 தலைவர்களின் பட்டியலில் ரொட்ரிகோவைத் தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, போப் பிரான்சிஸ், மைக்ரோசொப்ட் பில்கேட்ஸ், மார்க் ஷக்கர்பெர்க், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், இந்தியப் பிரதமர் மோடி வாக்குகள் எதையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாக்குகள் அடிப்படையில் 100 தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்