இலங்கையில் 26,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு

இலங்கையில் 26,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

18 Apr, 2017 | 6:39 pm

2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, இலங்கையில் 26,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அநுராதபுரம், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சிறுநீர் நோய்த் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்தது.

சுத்தமான குடிநீரைப் பருகாமையினால் சிறுநீரக நோய் அதிகளவில் ஏற்படுவதாக சிறுநீர் நோய்த் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்தது.

சிறுநீரக நோயைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்குமான பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி செயலணி முன்னெடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வவுனியா – தட்டான்குளம் கிராமத்தில் 100 க்கும் அதிகமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களின் கிராமத்திலிருந்து கிடைக்கும் குடிநீரினாலேயே சிறுநீரக நோய்த்தாக்கம் ஏற்படுவதாக அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்