சொந்த இடங்களுக்கு சென்ற மக்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு

சொந்த இடங்களுக்கு சென்ற மக்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு

சொந்த இடங்களுக்கு சென்ற மக்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Apr, 2017 | 3:36 pm

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்களின் நலன்கருதி நாளை (16) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கும் யாழ்ப்பாணம், பண்டாரவளை, காலி, மாத்தறை, ஆகிய இடங்களுக்குமிடையில் இந்த சேவைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களிலிருந்து மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பீ. ஆரியரட்ன தெரிவித்தார்.

இதனை தவிர, இலங்கை போக்குவரத்து சபை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 1700 பஸ் வண்டிகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

பிற மாகாணங்களிலிருந்து கொழும்பை நோக்கி இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர் ரூபா குணதிலக்க தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்