பட்டதாரிகளை கிழக்கின் வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

பட்டதாரிகளை கிழக்கின் வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

பட்டதாரிகளை கிழக்கின் வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 6:11 pm

சிறுபான்மை மக்களுக்கு நிரந்தரமான தீர்வொன்று இந்த நாட்டில் மலர வேண்டுமானால் அதற்கு அனைத்து தரப்பினரதும், திறந்த மனதுடான வெளிப்படையான கலந்துரையாடல்கள் அவசியம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள இந்த தமிழ் சிங்கள புத்தாண்டில் நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும், பகைமைகளை மறந்து தமது தாய் நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டும் என முதலமைச்சர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வியை முன்னெடுத்து, வீதியில் இறங்கி தொழில் வாய்ப்புக்களுக்காகப் போராடி வரும் பட்டதாரிகளை கிழக்கின் வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில், கிழக்கில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பான சகல ஆவணங்களையும் அரசாங்கத்திற்குக் கையளித்துள்ள நிலையில், பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்