ரயிலில் தொங்கிக்கொண்டு செல்ஃபி எடுக்க முயற்சி: தவறி வீழ்ந்த நண்பரைக் காப்பாற்ற முயன்ற நால்வர் பலி

ரயிலில் தொங்கிக்கொண்டு செல்ஃபி எடுக்க முயற்சி: தவறி வீழ்ந்த நண்பரைக் காப்பாற்ற முயன்ற நால்வர் பலி

ரயிலில் தொங்கிக்கொண்டு செல்ஃபி எடுக்க முயற்சி: தவறி வீழ்ந்த நண்பரைக் காப்பாற்ற முயன்ற நால்வர் பலி

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 5:40 pm

இந்தியா, கொல்கத்தாவின் தும்தும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தாராகாந்த் மாகால் என்பவர் தன்னுடைய நண்பர்கள் நால்வருடன் கோவிலுக்கு சென்று விட்டு ரயிலில் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

இவரின் இந்த விபரீத செல்ஃபி முயற்சியில் நண்பர்களான சுமித்குமார், சஞ்ஜீவ், காஜல் ஷாகா, சந்தானு ஆகிய நண்பர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, தாராகாந்தின் கால் தவறி ரயிலில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

உடனடியாக அவரைக் காப்பாற்றும் நோக்கில் பிற நண்பர்களும் ஒருவர் பின் ஒருவர் ரெயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர். அவசரத்தில் எதிர் புறத்தில் வந்த ரயிலை இவர்கள் கவனிக்கவில்லை.

இதனால், கீழே குதித்த நண்பர்கள் மீது ரயில் ஏறிவிட்டது.

இந்த சம்பவத்தில் தாராகாந்த் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் எதிர்புறமாக வந்த ரெயிலை நண்பர்கள் கவனிக்கத் தவறிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் நால்வரும் 25 முதல் 30 வயதுடையவர்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்