English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
14 Apr, 2017 | 4:51 pm
நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் வளம் அதிகமாகக் காணப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்குரிய புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர் சமூகத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக இத்தமல்கொட தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லைக்குள் காணப்படும் மீன் வளங்களை அடையாளங்கண்டு, அது தொடர்பான தகவல்களை மீனவர்களுக்கு அறியத்தரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, கடலில் மீன்வளம் உள்ள இடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் ஊடாக அதிகளவு மீன்களைப் பிடிப்பதற்கும், அதன் மூலம் அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் வழியேற்படுமென நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
கரைப் பகுதியிலிருந்து அகலாங்கு மற்றும் நெட்டாங்கு ரீதியாக கடலில் மீன்கள் இருக்கும் இடம் தொடர்பில் துல்லியமான தகவல்களை மீனவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையை நாரா நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடுகளை நான்கு வீதமான இலங்கை மீனவர்களுக்காக முழு அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் நாரா நிறுவன பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
29 Jun, 2022 | 08:46 PM
07 May, 2022 | 05:38 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS