மனுக்குமாரனின் சிலுவைத்தியாகத்தை நினைவுகூரும் பெரிய வௌ்ளி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது

மனுக்குமாரனின் சிலுவைத்தியாகத்தை நினைவுகூரும் பெரிய வௌ்ளி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 7:09 pm

மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும் இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்த மனுக்குமாரனின் சிலுவைத்தியாகத்தை நினைவுகூரும் பெரிய வௌ்ளி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனுவுருவான இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூரும் பெரிய வெள்ளியை முன்னிட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன.

கொழும்பு 13 புனித லூசியா ஆலயத்தில் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இந்த ஆராதனை பேராயர், பேரருட்திரு, மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை, கொழும்பு 11 கதிரேசன் வீதியில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை இடம்பெற்றது.

இந்த திருச்சிலுவைப் பாதையில் மதகுருமார்கள், கன்னியாஸ்திரிகள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்