போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் 40 பேர் இணைப்பு

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் 40 பேர் இணைப்பு

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் 40 பேர் இணைப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 4:34 pm

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை விஸ்தரிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 40 பேர் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் குறிப்பிட்டது.

விசேட தெரிவுக்குழுவொன்றின் ஊடாகவே இந்த உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினருக்கு நாட்டின் எந்தவொரு இடத்திற்கும் சென்று சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்தது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருள் தொடர்பில் 7292 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் சுட்டிக்காட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்