நல்லிணக்கம், சகவாழ்வைப் பேணும் நாடாக பலமாக எழுச்சி பெறுவோம்: புத்தாண்டு செய்தியில் ஜனாதிபதி

நல்லிணக்கம், சகவாழ்வைப் பேணும் நாடாக பலமாக எழுச்சி பெறுவோம்: புத்தாண்டு செய்தியில் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 3:46 pm

பிற்போக்கு சிந்தனைகளில் இருந்தும் பழமைவாதப் போக்கிலிருந்தும் விடுபட்டு, புதிய மனிதனாக உருவாகவேண்டும் என்பதே சித்திரைப் புத்தாண்டின் அனைத்து சம்பிரதாயங்களினதும் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள ஏவிளம்பி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றை பேணும் நாடாக பலமாக எழுச்சி பெறுவதற்கு மலர்ந்துள்ள புத்தாண்டில் உறுதிகொள்வோம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய சமூகங்களுடன் ஏற்பட்டிருக்கும் நெருங்கிய தொடர்புகளை இற்றைப்படுத்தலும், புத்தாண்டு சம்பிரதாயங்களினால் உறுதிப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் சகல இலங்கையர்களுக்கும், சௌபாக்கியமும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்