தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்: இரா. சம்பந்தன்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்: இரா. சம்பந்தன்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்: இரா. சம்பந்தன்

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 4:08 pm

தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்ற தமது கோரிக்கையை இந்த சந்தர்ப்பத்தில் முன்வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள ஏவிளம்பி புது வருடத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு எதிர்பார்ப்புக்களில் ஒன்றான புதிய அரசியலமைப்பானது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் வகையில், இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதாகவும் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோல வேண்டுமெனவும் பிரார்த்திப்பதாக இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

புத்தாண்டை தமிழ் – சிங்கள ஈரினத்தவர்களும் பொதுவாக மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் நல்லுறவுடன் கையாளும் சகஜநிலை நாட்டில் தோன்றி, இன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு சாந்தி, சமாதானம் மேலோங்கி இந்நாடு அமைதிப் பூங்காவாக மிளிர்ந்திட, பிறக்கும் ஏவிளம்பி புத்தாண்டில் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவரின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்