இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 8:57 pm

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளது.

கடந்த 5 நாட்களுக்குள் 84 மில்லியனுக்கும் 86 மில்லியனுக்கும் இடைப்பட்ட வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை சாதாரணமாக நாளாந்தம் 72 மில்லியனுக்கும் 74 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகையை வருமானமாக ஈட்டி வருகின்றது.

கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் தேசிய போக்குவரத்து சபையின் வருமானம் அதிகரித்துள்ளது.

அத்துடன், சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள், மீண்டும் கொழும்பிற்கு திரும்புவதற்காக நாளை மறுதினம் (16) முதல் விசேட பஸ் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பயணிகளின் வசதி கருதி ரயில் சேவைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்