அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கான ஒரு புதிய யுகத்தைப் படைக்க பாடுபட வேண்டும்: விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 4:18 pm

காழ்ப்புணர்வுகள், விரோதங்கள் அனைத்தும் அகல, அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கான ஒரு புதிய யுகத்தைப் படைக்க பாடுபட வேண்டுமென பிரார்த்திப்பதாக தமது புதுவருட செய்தியில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இன்னோரன்ன துன்பங்கள் அகலவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் தமது உறவுகளுடன் இணைந்துகொள்ளவும், விவசாயிகள், மீனவர்கள், வணிகர்களின் தொழில் முயற்சிகள் மேம்படவும் இந்த புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் புதிய வருடத்தை வரவேற்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வட மாகாணத்தை முன்னேற்றும் ஒரே சிந்தனையுடன் செயற்படுவதற்கு இப்புத்தாண்டு வழிவகுக்கும் என நம்புவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்