வடகொரியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2017 | 11:29 am

ஐ.நா. சட்ட திட்டங்களை பொருட்படுத்தாமல் அணு ஆயுதங்களை தொடர்ச்சியாக சோதித்து வரும் வடகொரியாவிற்கு சரியான பதிலளிக்க வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகளும், ஏவுகணைச் சோதனைகளும் அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து வருகின்றது.

உலக நாடுகளின் கண்டனத்தை பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக அணு ஆயுதங்களை சோதித்து வருகின்ற வடகொரியாவிற்கு பதிலளிப்பதே அமெரிக்காவின் நோக்கம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவில் விஷவாயு தாக்குதல் நடத்திய பஷார் அல் ஆசாத் அரசுக்கு சரியான பாடம் கற்றுத்தரும் வகையில், அமெரிக்கா 59 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்ச் சேதங்களுக்கு மத்தியில் அந்த விமான தளம் பலத்த சேதமடைந்துள்ளது.

வடகொரியா மீதும் இராணுவ நடவடிக்கை எடுப்பதே ஒரே வழி என அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

எனவே கொரிய தீபகற்பத்தை நோக்கி கார்ல் வின்சன் எனப்படும் அமெரிக்க கடற்படை தொகுதியை அனுப்பி வைக்க டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

எனவே எந்த நேரத்திலும் வடகொரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க கடற்படை தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்