யாழ். வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்

யாழ். வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்

யாழ். வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2017 | 1:38 pm

யாழ். வேலையற்ற பட்டதாரிகள் இன்று (12) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 45 நாளாக போரட்டத்தில் ஈடுப்பட்டுவந்த வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று உண்ணாவிரதப் பேராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், 45 ஆவது நாளாக காரைத்தீவு சுகாதாரப் பணிமனைக்கு அருகில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்புப் போராட்டம் 42 ஆவது நாளாக இன்றும் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், காந்தி பூங்காவில் 51 ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்