மருதானையில் போதை வில்லைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது

மருதானையில் போதை வில்லைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது

மருதானையில் போதை வில்லைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2017 | 1:50 pm

போதை வில்லைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் மருதானையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை சுதுவெல்ல முச்சந்தியில் வேன் ஒன்றில் போதை வில்லைகளுடன் பயணித்த சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியதை அடுத்து, குறித்த விற்பனை நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்கேநபர்களிடமிருந்து 27 போதைப்பொருளடங்கிய வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 , 37 மற்றும் 39 வயதுக்குட்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்