பிரமுகரைக் கொலை செய்ய முயற்சி: ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பிரமுகரைக் கொலை செய்ய முயற்சி: ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2017 | 10:03 pm

பிரமுகர் ஒருவரின் கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பிற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, சந்தேகநபர்கள் ஐவரும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரமுகர் ஒருவரைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக, புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்ட ஐந்து பேர், கடந்த ஜனவரி மாத இறுதியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்