பிரதமர் மற்றும் ஜப்பான் அமைச்சரவை செயலாளருக்கிடையில் கலந்துரையாடல்

பிரதமர் மற்றும் ஜப்பான் அமைச்சரவை செயலாளருக்கிடையில் கலந்துரையாடல்

பிரதமர் மற்றும் ஜப்பான் அமைச்சரவை செயலாளருக்கிடையில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2017 | 1:11 pm

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு விசேட பிரதிநிதியொருவரை நியமிப்பதாக ஜப்பான் அமைச்சரவை செயலாளர் யொஷி ஹதே சுகா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் கலாநிதி ஹிரோதோ இசுமியை அந்த பதவியில் நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இந்த கலந்துரையாடலின் போது ஜப்பான் அமைச்சரவை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திர வலயத்தின் கடற் போக்குவரத்து, சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்து சந்தர்ப்பங்களிலும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணித்து செயற்படுவதாகவும், எவ்வித இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் இடமில்லை எனவும் இலங்கை பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் தொலைக்காட்சி டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பில், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்