பஸ்களில் அதிக பணம் அறவிடுவது தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பஸ்களில் அதிக பணம் அறவிடுவது தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பஸ்களில் அதிக பணம் அறவிடுவது தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2017 | 7:08 am

பண்டிகைக் காலத்தில் பயணிகளிடமிருந்து அதிக பணத்தை அறவிடும் தனியார் பஸ் ஊழியர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் பயணிகளிடமிருந்து அதிக பணத்தை அறவிட்ட 8 பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி 28,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிக பணம் அறவிடுவது தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கும் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பஸ் நடத்துனர்கள் அதிக பணம் அறவிடுவது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக பணம் அறவிடும் பஸ் வண்டிகளின் பயண அனுமதி பத்திரம் தடைசெய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பஸ் வண்டிகளின் பயண அனுமதி மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்