திருகோணமலையில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு

திருகோணமலையில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு

திருகோணமலையில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2017 | 6:51 am

திருகோணமலையில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த குறித்த பெண் நேற்று (11) உயிரிழந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனுஷியா ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார்.

இன்புளுயன்சா ஏ-01 வைரஸ் தொற்றுக்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தோப்பூர்-அல்லை நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவரே இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனுஷியா ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்