தமிழக முதலமைச்சரை பதவி நீக்குமாறு ஆளுநரிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக முதலமைச்சரை பதவி நீக்குமாறு ஆளுநரிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக முதலமைச்சரை பதவி நீக்குமாறு ஆளுநரிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2017 | 5:55 pm

தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியையும் ஏனைய அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்யுமாறு, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்தின்போது, டி.டி.வி. தினகரன், முதலமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் அமைச்சர்களுடன் இணைந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், முதலமைச்சரையும் அமைச்சர்களையும் பதவி நீக்குமாறு வலியுறுத்தி திமுகவினால், ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக முக்கியஸ்தர்கள் மும்பையில் இன்று சந்தித்தனர்.

இதன்போது, மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் ஆளுநருக்கு கையளிக்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்