கொட்டதெனியாவ பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

கொட்டதெனியாவ பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

கொட்டதெனியாவ பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2017 | 2:23 pm

கொட்டதெனியாவ படல்கம, கட்டுகெந்த பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (12) காலை கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

68 வயதான பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் உயிரிழந்த பெண்ணின் பிள்ளைகள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்